உலகம் முழுதும் நிறைவதென்ன ---நம்
உள்ளம் என்றும் அலைவதென்ன
கலகம் வருகின்ற காலமென்ன ---மனம்
களிப்பினில் மூழ்கிடும் வேகமென்ன
காதல் காதல் காதல்
இரவும் பகலும் வளர்வதென்ன ---அந்த
இயற்கை வளர்க்கும் ஜாலமென்ன
உறவை பெருக்கும் உண்மையென்ன ---தினம்
உழன்றுத் தவிக்கும் கோலமென்ன
காதல் காதல் காதல்
ஆசைகள் அதிகம் வளர்வதென்ன ---கனவில்
அன்பரைக் கண்டு மகிழ்வதென்ன
ஏழை யின் நெஞ்சிலும் நுழைவதென்ன ---வரும்
இளமையே துன்பமாய் தெரிவதென்ன
காதல் காதல் காதல்
உயிரில் துடிக்கும் ஓசையென்ன ---இங்கு
உண்மையே பொய்யாய் போவதென்ன
மனதில் பொங்கும் மகிழ்ச்சியென்ன ---நாளும்
மலர்ந்து வழிந்திடும் கிளர்ச்சியென்ன
காதல் காதல் காதல்
எடுக்க வளரும் இன்பமென்ன ---எனோ
இணைய மறுத்திடும் துன்பமென்ன
படிக்க இனித்திடும் பாடமென்ன ---நேரில்
பார்த்து ரசித்திடும் பருவமென்ன
காதல் காதல் காதல்
உள்ளம் என்றும் அலைவதென்ன
கலகம் வருகின்ற காலமென்ன ---மனம்
களிப்பினில் மூழ்கிடும் வேகமென்ன
காதல் காதல் காதல்
இரவும் பகலும் வளர்வதென்ன ---அந்த
இயற்கை வளர்க்கும் ஜாலமென்ன
உறவை பெருக்கும் உண்மையென்ன ---தினம்
உழன்றுத் தவிக்கும் கோலமென்ன
காதல் காதல் காதல்
ஆசைகள் அதிகம் வளர்வதென்ன ---கனவில்
அன்பரைக் கண்டு மகிழ்வதென்ன
ஏழை யின் நெஞ்சிலும் நுழைவதென்ன ---வரும்
இளமையே துன்பமாய் தெரிவதென்ன
காதல் காதல் காதல்
உயிரில் துடிக்கும் ஓசையென்ன ---இங்கு
உண்மையே பொய்யாய் போவதென்ன
மனதில் பொங்கும் மகிழ்ச்சியென்ன ---நாளும்
மலர்ந்து வழிந்திடும் கிளர்ச்சியென்ன
காதல் காதல் காதல்
எடுக்க வளரும் இன்பமென்ன ---எனோ
இணைய மறுத்திடும் துன்பமென்ன
படிக்க இனித்திடும் பாடமென்ன ---நேரில்
பார்த்து ரசித்திடும் பருவமென்ன
காதல் காதல் காதல்
(உலகெங்கிலும் கொண்டாடப்பெறும் காதலர்தினத்திற்காக
இந்தப்பாடல் எழுதப்பட்டது 14-02-2019 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக